×

ஓபிஎஸ் எது நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை: மாஜி அமைச்சர் வைகைசெல்வன் பேட்டி

தாம்பரம்: ஓபிஎஸ் எது நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை என, அதிமுக மாஜி அமைச்சர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பில், தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலை அருகே, தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தினாலும், எது நடத்தினாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக மிகப் பெரிய மாநாட்டை நடத்த போகிறது. அதற்கான அறிவிப்பை நாளை (இன்று) நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார்.’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஓபிஎஸ் எது நடத்தினாலும் எங்களுக்கு கவலை இல்லை: மாஜி அமைச்சர் வைகைசெல்வன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,Ex-minister ,Vaikaiselvan ,Tambaram ,AIADMK ,minister ,Chengalpattu ,West District… ,Former ,
× RELATED செண்பகத்தோப்பு குலதெய்வம் கோயிலில்...