×

சூடானில் வன்முறை இந்தியர்களுக்கு தடை

ஹர்டோம்; ராணுவம், துணை ராணுவம் இடையே நடந்த மோதலால் சூடானில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. வட ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இப்போது ராணுவத்திற்கும் – துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளது.

The post சூடானில் வன்முறை இந்தியர்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Sudan ,Indians ,Hardome ,North Africa ,
× RELATED கரூர் மாவட்டத்தில் எள் சாகுபடி 300 ஏக்கரை தாண்டியது