×

ஒன்றிய அரசு பாடத்திட்டத்தில் காந்தி, குஜராத் கலவரம் நீக்கப்பட்டது எப்படி?.. என்சிஇஆர்டி விளக்கம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடங்களில் ஏராளமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில், குஜராத் கலவரம், முகலாயர்கள், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான காந்தியின் விருப்பம், இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே பற்றிய பாடங்கள் தேவையற்றது என்று நீக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன. தற்போது என்சிஇஆர்டி இணைய தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,’ தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் 25 தேர்ந்த நிபுணர்கள், 16 சிபிஎஸ்இ ஆசிரியர்களை கலந்து ஆலோசித்த பின்னரே என்சிஇஆர்டி பாடத்திட்ட அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

The post ஒன்றிய அரசு பாடத்திட்டத்தில் காந்தி, குஜராத் கலவரம் நீக்கப்பட்டது எப்படி?.. என்சிஇஆர்டி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Gujarat Riots ,Union Government ,NCERT ,New Delhi ,CBSE ,Gujarat ,Mughals ,Hindu ,Muslim ,Dinakaran ,
× RELATED கர்நாடகத்தை உலுக்கும் ஆபாச வீடியோ...