×

125 அடியில் அம்பேத்கருக்கு சிலை தெலங்கானா முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது 125 அடி வெண்கல சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதல்வருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது 125 அடி வெண்கல சிலையை திறந்து வைத்த தெலங்கானா முதல்வருக்கு பாராட்டுகள். புத்தர் சிலைக்கும் தெலங்கானா தலைமைச் செயலகக் கட்டிடத்துக்கும் இடையே சமத்துவத்தின் மாபெரும் அடையாளமாக அம்பேத்கரின் சிலையை நிறுவிட வேண்டும் என்ற எண்ணம் சாலப் பொருத்தமானது, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

The post 125 அடியில் அம்பேத்கருக்கு சிலை தெலங்கானா முதல்வருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Telangana ,CM ,G.K. ,Stalin ,Chennai ,Tamil Nadu ,Baba Saheb Ampedkar ,G.K. Stalin ,
× RELATED நீதியை உறுதி செய்வோம் ரோஹித் வெமுலா...