×

பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலை மீது வழக்கு: திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ளார். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை கூறிய பொய்க்குற்றச்சாட்டுக்களை திமுக எதிர்கொள்ளும் என்று திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். இது தொடர்பாக என்.ஆர்.இளங்கோ எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘திமுகவின் சட்டத்துறை, தலைவர் மு.க.ஸ்டாலின் வழிக்காட்டுதலின் பேரில் அண்ணாமலையின் பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கொள்ளும். அதற்குரிய வழக்குகள் தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடரப்படும்’ என்றார்.

The post பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலை மீது வழக்கு: திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Thisagam ,Law ,chennai ,minister ,dibuvir ,Dizhagam Law Secretary ,Dinakaran ,
× RELATED வக்கீல்களை நியமிக்க வசதி இல்லை...