×

உயர் மின்னழுத்த கம்பத்தில் ஆட்டோ மோதி விபத்து-10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையின் ஓரம் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் மின்கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வழியாக காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு சென்ற ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலை ஓரம் இருந்த உயர்மின் அழுத்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்ததோடு உயர் மின்னழுத்த கம்பமும் உடைந்து சாய்ந்தது. இதனால் மின்கம்பி அறுந்து உளுந்தூர்பேட்டை பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் ஆட்டோவை அப்புறப்படுத்தி உடைந்த மின்கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனால் காட்டு நெமிலி, கிள்ளனூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆட்டோவை
ஓட்டிவந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post உயர் மின்னழுத்த கம்பத்தில் ஆட்டோ மோதி விபத்து-10க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Ilundurbate ,Kallukkurichi District ,Vrutchasalam ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் குடோன் ஒன்றில்...