×

தளியில் இயங்கி வரும் கொய் மலர் மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு

தேன்கனிக்கோட்டை : தளியில் இயங்கி வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில், இஸ்ரேல் தூதரக அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், இந்திய – இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், தளியில் கொய்மலர் மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, இஸ்ரேல் தூதரக அதிகாரி யாயர்இசேல் மற்றும் குழுவினர், கொய்மலர் மகத்துவ மையத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர். பசுமை குடிலில் வளர்க்கப்பட்டு வரும் கொய்மலர்களான ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் மற்றும் நிழல்வலை கூடாரத்தில் வளர்க்கப்பட்டு வரும் அலங்கார தாவரங்கள், அலங்கார இலைகளை பார்வையிட்டனர்.

மேலும், மண்ணின் தன்மை, செடிகளின் வளர்ப்பு முறை, பசுமை குடில்களின் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர்பாசன முறைகள் பற்றி விளக்கங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர். தொடர்ந்து, இங்கு அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகள், ஆப்பிள் தோட்டம் மற்றும் தேனி வளர்ப்பு குறித்து அறிவுரைகளை வழங்கினர். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி மற்றும் கொய்மலர் மகத்துவ மைய திட்ட அலுவலர் ஆறுமுகம், தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post தளியில் இயங்கி வரும் கொய் மலர் மகத்துவ மையத்தில் இஸ்ரேல் தூதரக அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Israel Consular ,Guava Center ,Excellence ,Tali ,Dhenkanikottai ,Koimalar Magnificence Center ,Thili ,Israeli ,Consular ,Koi Malar Magnificence Center ,Dinakaran ,
× RELATED விருகம்பாக்கம் பாலலோக் சிபிஎஸ்இ...