×

தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றது ஒன்றிய அரசு

டெல்லி: தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் பணிக்கு சுமார் 10,000 பேரை தேர்வு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

ஆட்சேர்க்கைகான கனிதத் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தாதது பரபட்சமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழிலும் தேர்வு நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்க மறுத்து 2 நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது சி.ஏ.பி.எஃப் தேர்வை இதுவரை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தி வந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தது சி.ஏ.பி.எஃப். தமிழ்நாட்டில் மட்டும் 579 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதலமைச்சர் கோரிக்கையை 2 நாட்களுக்கு முன் நிராகரித்த ஒன்றிய அரசு திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.

சி.ஏ.பி.எஃப் முடிவுக்கு எதிராக 17ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்திருந்தார். ஆங்கிலம்,இந்தி மற்றும் 13 மாநில மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு 2024 ஜனவரி.1ம் தேதி நடைபெற உள்ளது. இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சி.ஏ.பி.எஃப்பில் பணியாற்ற சம வாய்ப்பு வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

வரலாற்றில் முதல்முறையாக தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எஃப் தேர்வு நடைபெற உள்ளது. முதல்முறையாக மாநில மொழிகளில் தேர்வு நடைபெறுவதால் பெருமளவு இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பார்கள் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சி.ஏ.பி.எஃப் தேர்வு என்பது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்தார்.

The post தமிழிலும் சி.ஏ.பி.எஃப் தேர்வு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Delhi ,Ministry of Home Affairs ,Dinakaran ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...