×

சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி மாடர்ன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. முதற்கட்டமாக ஒருவர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் தகவல் தெரியவந்த நிலையில் தற்போது இருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிவருகின்றனர்.

வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பட்டாசு ஆலைக்குள் யாரும் செல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள பட்டாசு ஆலைகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வில்லை. மேலும் விசாரணை மேற்கொள்ள விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைத்துள்ளார். இன்றைய தினம் 50கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்திருக்கின்றனர்.

வெடி விபத்து சத்தம் கேட்ட பின் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி மேலும் யாராவது உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிக வெப்பம் காரணமாகவும், உராய்வு காரணமாகவும் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vlampatti ,Sivakasi ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை