×

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் மர்மமான முறையில் பலி : 2018-ல் நடந்த சம்பவத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என வேதனை

நெல்லை: சாத்தான் குளம் சம்பவத்தை போன்று நெல்லை மாவட்டம் செவந்திபட்டி காவல் நிலையத்திலும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் செவந்திபுரம் காவல் நிலையத்தில் வைத்து இருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

உயிரிழந்த இருவரில் முருகேசன் மீது இதற்கு முன்பு எந்த ஒரு குற்றவழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காவல் நிலையத்திற்கும் முருகேசனுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாத நிலையில் தீடீரென்று அழைத்து சென்றதன் காரணம் என்ன என்பது குடும்பத்திற்கு ஒரு கேள்வி குறியாக இருக்கிறது. அதே போல் மாணிக்கராஜ் நன்கு படித்து மெரிட்டில் அரசு சட்ட கல்லூரியில் தேர்வாகி இருந்த மாணவர்.

உறவினருக்கும், காவல்துறைக்கும் இருக்கும் முன்பகை காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்தனர். இந்நிலையில் இருவரையும் அடித்து கொலை செய்யப்பட்டிருகின்றனர், என்பது கிடைக்க பெற்ற ஆவணங்களின் அடிப்படையிலும் சாட்சியங்களின் அடிப்படையிலும் தெரியவந்துள்ளதாக வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிபிசிஐடி போலீசார் மூலம் விசாரிக்க வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு சம்பவம் நடந்த மார்ச் மாதம் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மதுரை கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் 2019 ஒரு வருடத்திலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவிற்கு வந்த போது அந்த அதிகாரி மாற்றப்பட்டு மற்றொரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் 2019 முதல் 2022 வரை விசாரணையில் ஈடுபட்ட நிலையில் எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்தை வழக்கறிஞ்சர்கள் தரப்பு நாடுகிறது.

இன்னும் 6 மாத காலத்துக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வர வேண்டும். இதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது. அந்த அடிப்படையில் இதற்காக சிபிசிஐடியில் டி.எஸ்.பி. வினோத் என்பவரை நியமித்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாத டி.எஸ்.பி. பொன்னரசு உட்பட 10 காவலர்கள் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சாத்தான் குளத்தில் இதே போல ஜெயராஜ்,பெண்ணிக்ஸ் அடித்து கொள்ளப்பட்ட வழக்கில் 10 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது கொலைவழக்காக பதிவு செய்யப்பட்டது. அதே போலவே இங்கேயும் டி.எஸ்.பி. பொன்னரசு உட்பட 10 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருப்பது பேர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞ்சர் தலைமையில் தெரிவித்திரிருக்கிறார்கள் அந்த அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

The post போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இருவர் மர்மமான முறையில் பலி : 2018-ல் நடந்த சம்பவத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என வேதனை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nellai District Sewantipatti Police Station ,Satan Pond incident ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...