×

நாகலாந்தில் 13 பேர் சுட்டுக்கொலை ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை

கோகிமா: நாகலாந்தில் அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டு கொன்ற ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. நாகாலாந்தில் உள்ள ஓடிங் பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காத்திருந்தனர். இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகித்து ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 13 பேர் பலியாகினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சம்பவம் தொடர்பாக 30 வீரர்கள் மீது நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து ராணுவ நீதிமன்றத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், துப்பாக்கிசூடு நடத்திய வீரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுபற்றி நாகலாந்து போலீஸ் ஐஜி மோன் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

The post நாகலாந்தில் 13 பேர் சுட்டுக்கொலை ராணுவத்தினர் மீதான சட்ட நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு தடை appeared first on Dinakaran.

Tags : Nagaland ,Union Government ,Gokima ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...