×

அரண்மனை 4ல் தமன்னா, ஆண்ட்ரியா, ராசி கன்னா

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களும் வெற்றி பெற்றது. இப்போது நான்காவது பாகம் உருவாகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோவாக அவரே நடித்து வருகிறார். சுந்தர்.சி ஜோடியாக ராசி கன்னா நடிக்கிறார். அவருடைய தங்கையாக தமன்னா நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முதல் ‘அரண்மனை 4’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொச்சியில் தொடங்கி இருப்பதாகவும், அதில் சுந்தர் சி, தமன்னா, ராசி கன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தார். அவர் கால்ஷீட் பிரச்னையால் விலகியதால் சுந்தர்.சி அவரது வேடத்தில் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறார். ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ், மீனா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

The post அரண்மனை 4ல் தமன்னா, ஆண்ட்ரியா, ராசி கன்னா appeared first on Dinakaran.

Tags : Tamannaah ,Andrea ,Rasi Khanna ,CHENNAI ,Sundar.C ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...