×

ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, இந்தியாவிலேயே மிக ‘உயரமான அம்பேத்கர் சிலை’-ஐ ஐதராபாத்தில் இன்று திறக்கப்பட்டது. 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.

ஐதராபாத்தில் ஹிசைன் சாகர் ஏரி கரையோரம் 50 அடி உயர பீடத்தில் 125 உயர அம்பேதகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ள பீடம் நாடாளுமன்ற கட்டடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 11.40 ஏக்கரில் ரூ.146.5 கோடியில் 360 டன் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மற்றும் 114 டன் வெண்கலத்துடன் அம்பேத்கர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த சிலை 175-அடியாக உள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இவை தவிர நாடாளுமன்றம் போல் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் அம்பேத்காரின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 100 அமர கூடிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் அம்பேத்கரின் வாழ்கை வரலாறு திரைப்படமாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தெலுங்கானா மாநிலத்தின் மூத்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

The post ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chandrasekara Rao ,Ambedkar ,Hyderabad ,Alal Ambetkar ,India ,Ambetkar ,Chief Minister ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து