×

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் பசுமை மலர்க்கனிகள் அலங்காரம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள இத்திருக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது. இத்திருக்கோயிலுக்கு வந்து வணங்கினால் வீடு கட்டுதல், திருமணப்பேறு, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைப்பதாக ஐதீகம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு உற்சவத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் பசுமைசெடிகள் மலர்கள் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோபுரங்கள் விமானங்களில் வண்ணமின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டது.

வெள்ளியன்று அதிகாலை மூலவருக்கும் உற்சவருக்கும் 27 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மூலவர் சந்தனகாப்பு வைர அங்கி அலங்காரத்திலும் உற்சவர் மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.

விநாயகர் சந்நிதி முன்பு சோபகிருது புத்தாண்டு பஞ்சாங்கம் ஆனந்தகுருக்களால் வாசிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடை அணிந்து வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகரன், ஊராட்சி தலைவர் ஜான்சிராணி ராஜா, முன்னாள் அறங்காவலர் பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வருகை தந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தால் இனிப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

உற்சவ ஏற்பாடுகளை தக்கார் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் பசுமை மலர்க்கனிகள் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Churuvapuri Murugan Temple ,Tamil Thankuthandam ,Thiruvallur District ,Periyapalayam ,Churuvapuri Balasuppramaniyaswamy Thirukoil ,Arunagirinadar ,Hinduism Foundation ,Thiruvapuri ,
× RELATED மீஞ்சூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது