×

கொளத்தூர், சேப்பாக்கம், சோழவந்தான் உள்பட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கொளத்தூர், சேப்பாக்கம் உள்பட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது. இதில், மாவட்ட தலைநகர் உட்பட 61 தொகுதிகளில் ஏற்கனவே ஸ்டேடியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது என தெரிவித்திருந்தார்.

எனவே, தமிழகத்தில் மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்றும் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய திறந்தவெளி மற்றும் உள் விளையாட்டு அரங்குகள் நிறுவப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பனி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம் உள்பட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க அரசாணை வெளியாகியுள்ளது. அதன்படி, வாணியம்பாடி, காங்கேயம், சோழவந்தான், திருவெறும்பூர், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம், ஆலங்குடி மற்றும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி தரப்பட்டுள்ளது. தலா ரூ.3 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொளத்தூர், சேப்பாக்கம், சோழவந்தான் உள்பட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kolathur ,Chepakkam ,Cholavanthan ,Chennai ,Tamil Nadu ,Cholavandan ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...