×

கோடிக்கணக்கான பணத்துடன் போதை டிரைவர் சிக்கினார்

சூலூர்: கோவை அருகே சூலூர், பாப்பம்பட்டி பிரிவில் ஏடிஎம்களில் நேற்று பணம் நிரப்புவதற்காக வேன் வந்தது. அந்த வேன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அந்த வேனை விரட்டி கண்ணம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது வேனின் டிரைவர் அதிக போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த வேனை சிறைபிடித்த பொதுமக்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விசாரணையில், வேன் டிரைவர் கோவை வெள்ளலூரைச் சேர்ந்த மனோஜ் (32) என்பதும், வேனில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததும் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். …

The post கோடிக்கணக்கான பணத்துடன் போதை டிரைவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Sulur ,Sulur, Papambatti ,Coimbatore ,Dinakaran ,
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!