×

பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில் 670 பேர் ஆப்சென்ட்

திருப்பூர், ஏப்.14: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வை 31 ஆயிரத்து 367 பேர் எழுதினர். 670 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி துவங்கியது. வரும் 20ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், 113 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளில் பயிலும் 15 ஆயிரத்து 392 மாணவர்கள், 15 ஆயிரத்து 280 மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் 1,521 என மொத்தம் 32 ஆயிரத்து 193 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த கணிதத்தேர்வுக்கு 32 ஆயிரத்து 37 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 31 ஆயிரத்து 367 பேர் எழுதினர். 670 பேர் எழுதவில்லை. காயமடைந்தவர்கள் மற்றும் கண்பார்வையற்றவர்கள், மனநலம் குன்றிய மாணவ, மாணவியர் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.

The post பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில் 670 பேர் ஆப்சென்ட் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்