×

கூடலூர் ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம்

கூடலூர் ஏப்.14:திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வழிகாட்டுதலின்படி கூடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஓவேலி,தேவர் சோலை பேரூர்,முதுமலை, ஸ்ரீமதுரை,மசினகுடி ஊராட்சிகளின் பாகநிலை முகவர்கள் மற்றும் வார்டு கிளை,ஊர்கிளை செயலாளர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி தலைமையில் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது.தலைமை கழக பிரதிநிதி மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவி ராஜா ஆய்வு செய்து, புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவத்தை வழங்கி துவக்கி வைத்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூர் கழக செயலாளர்கள்செல்வரட்ணம், சுப்ரமணி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் உத்தமன், கங்காதரன், சதீஷ் ஒன்றிய நிர்வாகிகள் கருப்பையா, மூர்த்தி, காந்தி செல்லதுரை வெங்கடாச்சலம் பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா,பால்ராஜ், சத்திய சீலன், யூசுப், ரவிச்சந்திரன், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் கீர்த்தனா,வள்ளி,சித்ராதேவிமற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வார்டு கிளை செயலாளர்கள்,பாகநிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post கூடலூர் ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Booth Committee Meeting ,Cudalur Union ,Kudalur ,DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Nilgiri ,P.M. Mubarak, ,Oveli ,Devar ,Kudalur union ,Dinakaran ,
× RELATED கூடலூர், பந்தலூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை