×

பொதுமக்களின் வசதிக்காக திருவெற்றியூர்-மதுரை இடையே நேரடி பஸ் இயக்க கோரிக்கை

திருவாடானை, ஏப்.14: திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் வெளியூரில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தங்கி சாமி கும்பிட்டு செல்கின்றனர். இதனால் இந்த இரண்டு கிழமைகளிலும் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் ராமேஸ்வரம் செல்லும் வழித்தடம் அருகில் இருப்பதால் ராமேஸ்வரம் சுற்றுலா வரும் பெரும்பான்மையான மக்கள் பஸ்,கார்,வேன் போன்ற வாகனங்களில் இங்கு வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர்.

இதனால் கிராம பகுதியாக இருந்தாலும் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இந்த கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேங்காய் பழம் கடைகளும், பேன்சி கடைகள், ஓட்டல், டீக்கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ய உள்ளூர் வியாபாரிகள் மதுரைக்குச் சென்று தான் அனைத்து வகையான சரக்குகளும் கொள்முதல் செய்கின்றனர். மேலும் சிவகங்கை,மதுரை,காளையார்கோவில் பகுதிகளில் இருந்து தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி ஆகிய ஊர்களுக்கு திருவாடானை வழியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

இங்கு வரும் பக்தர்கள் இங்கிருந்து திருவாடானை சென்று இறங்கி பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பெரும்பான்மையான பசுக்கள் அனைத்தும் தேவகோட்டை காரைக்குடி நேரடி பஸ் இயக்கப்படுகிறது. மதுரைக்கு செல்ல வேண்டுமென்றால் திருவாடானை சென்று தான் வேறு பஸ் மாறி செல்ல வேண்டும். எனவே இங்கு வரும் பக்தர்கள் வசதிக்காகவும், வியாபாரிகளின் வசதிக்காகவும், மதுரைக்கு காளையார்கோவில், சிவகங்கை வழியாக நேரடி பஸ் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுமக்களின் வசதிக்காக திருவெற்றியூர்-மதுரை இடையே நேரடி பஸ் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvettiyur ,Madurai ,Thiruvadanai ,Thiruvettiyur ,Bagampriyal Amman temple ,Tiruvettiyur- ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...