×

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

செம்பனார்கோயில், ஏப்.14: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. அட்ட விரட்ட தளங்களில் ஒன்றான இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1997-ம் ஆண்டு மாசி மாதம் 26ம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் 25 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதையொட்டி தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் யாக குண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. முன்னதாக அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Kumbabhishek ,Thirukkadaiyur Amrithakateswarar Temple ,Sembanarkoil ,Thirukkadaiyur Amirthakadeswarar Temple ,Swami ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா