×

(தி.மலை) சாலை விதிமீறல்கள் ெதாடர்பாக கடந்த ஆண்டு ₹32 லட்சம் அபராதம்410 வாகனங்கள் பறிமுதல்திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஆண்டு சாலை விதிமீறல் தொடர்பாக ₹32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 410 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் செயலாக்க பணிகள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய வாகன உரிமையாளர்களிடம் இருந்து ₹ 32 லட்சத்து 23 ஆயிரத்து 850யை அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.

அதேபோல், 1,062 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, சாலை வரியாக ₹13 லட்சத்து 80 ஆயிரத்து 524 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விதிமீறல் குற்றங்களுக்காக சிறைபிடிக்கப்பட்ட 46 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு ₹9,76,900 அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதிக சுமையை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக 49 சரக்கு வாகனங்களும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்ற குற்றத்துக்காக 54 சரக்கு வாகனங்கள் மீது நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாத குற்றத்துக்காக 87 இரு சக்கர வாகனங்கள் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி 7 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
அதிவேகமாக சென்ற 76 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுத்திய 92 வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. அதேபோல், சாலை போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 410 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்ைக எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post (தி.மலை) சாலை விதிமீறல்கள் ெதாடர்பாக கடந்த ஆண்டு ₹32 லட்சம் அபராதம்
410 வாகனங்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில்
appeared first on Dinakaran.

Tags : D.malai ,Thiruvannamalai district ,Tiruvannamalai ,Tiruvannamalai district ,Th ,. Malai ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...