×

நகை வாங்குவதற்கு வந்த ஆந்திர தம்பதியிடம் ரூ60 லட்சம் கொள்ளை

தண்டையார்பேட்டை,: ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சுப்பாராவ் (45). இவருடைய மனைவி லட்சுமி (40). இவர்கள் மிரியால் குடம் பகுதியில் நகைக்கடை நடத்திவரும் கிருஷ்ணா என்பவரது நகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். சென்னையில் உள்ள ராஜ் என்பவரிடம் நகை வாங்கி வர ஆந்திராவில் இருந்து ரூ60 லட்சத்தை கொடுத்து தம்பதியரை கிருஷ்ணா நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்துள்ளார். இதற்காக கணவன் மனைவி இருவரும் பேருந்தில் சென்னை வந்தனர்.

மாதவரத்தில் இருந்து ஆட்டோ மூலம் கொருக்குப்பேட்டை பேசின் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு நேற்று தம்பதியர் வந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 2 பேர், சுப்பாராவிடமிருந்து ரூ60 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து சுப்பாராவ் ஆர்கே நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தம்பதியர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உண்மையிலேயே கொள்ளை சம்பவம் நடந்ததா என விசாரிக்கின்றனர்.

The post நகை வாங்குவதற்கு வந்த ஆந்திர தம்பதியிடம் ரூ60 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Subbarao ,Guntur, Andhra Pradesh ,Lakshmi ,Mirial Kudam ,
× RELATED ஓடும் காரில் திடீர் தீவிபத்து