×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் துணை தாசில்தார் பலி

அண்ணாநகர்: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் சதாசிவம் (59). இவர், அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தில், துணை தாசில்தாரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அலுவலக பணி நிமித்தமாக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். பின்னர், பணிகளை முடித்துவிட்டு தர்மபுரி செல்வதற்கு கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வந்து, பேருந்தில் அமர்ந்து இருந்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்த சக பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் சதாசிவத்தை பரிசோதனை செய்தனர். அதில், ஏற்கனவே, அவர் இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்த, கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்து வருகின்றனர்.

The post கோயம்பேடு பஸ் நிலையத்தில் துணை தாசில்தார் பலி appeared first on Dinakaran.

Tags : Deputy ,Tahsildar ,Koyambedu bus station ,Annanagar ,Sathasivam ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்