×

வெளிநாட்டு நிதி முறைகேடு: பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு

புதுடெல்லி: வெளிநாட்டு நிதியை பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பிபிசி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிபிசி நிறுவனம் குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பிபிசி இந்தியா, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அதன் அலுவலகங்களில் பிப்ரவரி 14ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக பிபிசி இந்தியா மீது அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் துணை நிர்வாக ஆசிரியர் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளின் கீழ் சில நிர்வாகிகளின் ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பதிவு செய்வதற்கு அமலாக்கத்துறை அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வெளிநாட்டு நிதி முறைகேடு: பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு appeared first on Dinakaran.

Tags : BBC ,New Delhi ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...