×

உ.பி. முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மகன் என்கவுன்டரில் கொலை: கூட்டாளியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்

லக்னோ: வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆசாத் அகமது, அவரது கூட்டாளியையும் உத்தரபிரதேச காவல்துறையினர் சுட்டு கொன்றனர்.
பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த 2004ம் ஆண்டு சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ரவுடியாக இருந்து எம்பியாக மாறிய ஆதிக் அகமது, அவரது மகன் ஆசாத் அகமது மற்றும் கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த ஆசாத், குலாம் ஆகியோர் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு தரப்படும் என உத்தரபிரதேச காவல்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் மறைந்திருந்த ஆசாத், குலாம் ஆகியோரை காவல்துறை பிடிக்க சென்றபோது, அவர்கள் தப்பியோட முயன்றனர் அப்போது ஆசாத், குலாம் இருவரையும் காவல்துறையினர் சுட்டு கொன்றனர்.

ஆதிக் அகமதுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
உமேஷ்பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது, அவரது சகோதரர் ஆஷ்ரப் ஆகியோர் நேற்று பிரயாக்ராஜ் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தினேஷ் கவுதம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் அவர்களுக்கு 5 நாள் போலீஸ் காவல், 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

The post உ.பி. முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மகன் என்கவுன்டரில் கொலை: கூட்டாளியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர் appeared first on Dinakaran.

Tags : UP ,Former ,Aadiq Ahmed ,Lucknow ,Asad Ahmed ,Umesh Paul ,Uttar ,Pradesh police ,UP Former MP ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...