×

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணத்துக்கான உதவி தொகை ரூ.30,000: உயர்த்தி அறிவித்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவியப்பு

சென்னை: சட்டசபையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு:

  • ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 விலையில்லா மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1.60 கோடி செலவில் வழங்கப்படும்.
  • உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.1000 கல்வி உதவி தொகை வழங்கப்படும்.
  • உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து மரணத்திற்கான உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள் துவங்கப்படும்.
  • கபர்ஸ்தான் மற்றும் அடக்கஸ்தலங்களுக்கு ரூ.1 கோடியில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்படும் மற்றும் புனரமைக்கப்படும்.
  • சொந்த கட்டிடத்தில் இயங்கும் சிறுபான்மையினர் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சென்னை மாவட்டம் ராயப்பேட்டையில் ஒரு சிறுபான்மையினர் கல்லூரி மாணவியர் விடுதிக்கு 6 கோடியே 7 லட்சத்தி 75 ஆயிரம் ரூபாய் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.
  • கோயம்புத்தூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு முஸ்லிம் மகளிர் உதவி சங்கம் ரூ.2 லட்சம் செலவில் புதிதாக துவங்கப்படும்.
  • கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மூலம் ரூ.1 கோடி செலவில் நடத்தப்படும்.
  • அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்பட்டு வரும் தொகை ரூ.2000லிருந்து ரூ.10 ஆயிரம் ஆக 3 லட்சத்து 4 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துகளை அளவை செய்வதற்காகவும் மற்றும் 11 மண்டல அலுவலகங்களில் 11 கணினிகள் மற்றும் 11 ஸ்கேனர்கள் கூடிய நகலெடுக்கும் இயந்திரங்கள் வாங்கவும் ரூ.2 கோடி வழங்கப்படும்.
    இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணத்துக்கான உதவி தொகை ரூ.30,000: உயர்த்தி அறிவித்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவியப்பு appeared first on Dinakaran.

Tags : Ulama and Staff Welfare Board ,Minister ,Senji Mastan ,Chennai ,Minister Senji K.S. Mastan ,Minority Welfare and Expatriate Tamils welfare department ,Ulemas and Staff Welfare Board ,Minister Senji Mastan ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...