×

பிறந்தநாள் விழாவில் விபரீத விளையாட்டு கோமாவுக்கு சென்ற சென்னை மாணவன்: 4 பேர் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி: பிறந்தநாள் விழாவில் விபரீத விளையாட்டால் சென்னை மாணவன் கோமாவுக்கு சென்றான். இதுதொடர்பாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில், அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் சபீக்அகமது , 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்து, தினமும் கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். இவருக்கு கடந்த 10ம் தேதி பிறந்த நாள். சக மாணவர்கள் விடுதி வளாகத்தில் கொண்டாடினர்.

அப்போது சபீக் அகமதுவை தூக்கி போட்டு விளையாடினர். இதில் கீழே விழுந்த சபீக்அகமது மீது, மற்ற மாணவர்கள் விழுந்துள்ளனர். இதில் அவரது கழுத்து பகுதியில், பலத்த காயமடைந்து சுருண்டு விட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டு, அந்த மாணவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து 4 மாணவர்களை 3 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து டீன் ராஜஸ்ரீ உத்தரவிட்டுள்ளார். மேலும் 5 மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

The post பிறந்தநாள் விழாவில் விபரீத விளையாட்டு கோமாவுக்கு சென்ற சென்னை மாணவன்: 4 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Madrasa ,Krishnagiri ,Chennai ,Krishnagiri… ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை