×

கண்ணாடி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர்: திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்தவர் லாரி டிரைவர் பெரியசாமி (46). இவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் சிப்காட்டில் இயங்கி வரும் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் இருந்து நேற்று லாரியில் கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூருக்கு சென்றார். சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மாம்பாக்கம் அருகே சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் உடைந்து சாலையில் சிதறியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பெரியசாமி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால், சென்னை மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கிரேன் உதவியோடு, லாரியையும், கண்ணாடி துகள்களையும் அப்புறப்படுத்தினர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கண்ணாடி ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Periyasamy ,Thariyaur ,Trichy district ,Mambakkam Chipgat ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே 9 பசு மாடுகள்...