×

ரூ.100 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் குறளக கட்டிடம் உருவாகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

கதர் மற்றும் கிராம தொழில்கள் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு:

  • சென்னை எஸ்பிளனேடு பகுதியில் 44640 சதுர அடியில் அமைந்துள்ள குறளக கட்டிடத்தை இடித்து விட்டு, நவீன வசதியுடன், போதுமான வாகன நிறுத்துமிட வசதிகளுடன் புதிய கட்டிடம் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும்.
  • சுத்தமான, உண்மை தன்மையுள்ள அனைத்து பனைப் பொருட்களையும் ஒரே இடத்தில் வைத்து, மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ராமநாதபுரம்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள நரிப்பையூர் பகுதியில் ரூ.5 கோடி செலவில் ஒரு பனை பொருட்கள் வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது.
    இந்த மையம், சாலையோர வணிக வளாகம் போன்று, பனைப் பொருள் விற்பனை கூடம், உணவகம், பரிசுப் பொருட்கள் அங்காடி, சிறுவர் விளையாட்டு பூங்கா போன்றவற்றுடன் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தும் வசதிகளை கொண்டதாக இருக்கும்.
  • தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் பனை வெல்லக் கிடங்கு மற்றும் பனை ஓலைத் தொழிற்கூடம் ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • கடலூர் நகரத்தில் 4 விற்பனை அங்காடிகள் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள தொழிற்கூடத்திற்கு தேவைப்படும் உபகரணங்கள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து நிறுவப்படும்.
  • மதுரை-விருதுநகர்-திண்டுக்கல் மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனத்திற்கு குளிர்சாதன வசதிகளைக் கொண்ட 10 தள்ளு வண்டிகள் மற்றும் 5 குளிர்பதனப் பெட்டிகள் ரூ.15 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
  • மண்பாண்ட தொழிலுக்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரூ.14 லட்சத்தில் புதிய தொழிற் கூடம் கட்டி தரப்படும்.
  • தமிழ்நாடு மாநில இணையத்தின் மானாமதுரை கிளை வளாகத்தில் விற்பனை அங்காடி ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

The post ரூ.100 கோடியில் பல்வேறு நவீன வசதிகளுடன் குறளக கட்டிடம் உருவாகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Rajaganappan ,R.R. S.S. ,Dinakaran ,
× RELATED ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர்,...