×

மூலிகை பண்ணையில் ஆய்வு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு சார்பில், நடத்தப்படும் மூலிகை பண்ணையில் அரியவகை மூலிகைச்செடிகள் மற்றும் மரங்கள் உள்ளன. இந்த மூலிகைகளை பறித்து காயவைத்து, பதப்படுத்தி, மருந்துகளாக தயாரித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய, மாநில அதிகாரிகள் வந்திருந்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தாரேஸ் அகமது மற்றும் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஸ்ரீசைலேஷ்குமார் ஆகியோர் இந்த மூலிகை பண்ணையை பார்வையிட்டு எந்தெந்த மூலிகைகள் என்னென்ன நோய்களை தீர்க்கிறது. இதன் தயாரிப்பு முறைகள் மற்றும் சந்தைப்படுத்துவது ஆகியவை பற்றி இருளர் பெண்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

இருளர் பெண்கள் நல அமைப்பின் இயக்குனர் ஜேக்கப், திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், தண்டரை ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மூலிகை பண்ணையில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Ilular Tribal Women's Welfare Organization ,Thandarai ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்