×

அரசு கவின் கலை கல்லூரியில் புதிய வடிவமைப்புகளுக்கான போட்டி: அமைச்சர் அறிவிப்பு

சட்டசபையில் தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகம் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பு:

  • ரூ.15 லட்சத்தில் பெண்களுக்கு தஞ்சாவூர் ஓவிய கைத்திறத் தொழிலில் பயிற்சி அளிக்கப்படும்.
  • ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 10 தமிழ்நாடு கைவினைப் பொருட்களுக்கு புவிசார்குறியீடு.
  • அரசு கவின் கலை கல்லூரிகளில் ரூ.25 லட்சத்தில் புதிய வடிவமைப்புகளுக்கான போட்டிகள் நடத்தப்படும்.
  • இந்தியாவின் முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் ரூ.1.50 கோடியில் நடத்தப்படும்.
  • அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.50 லட்சத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
  • திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறைகள் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்படும்.
  • கைவினை கலைஞர்களுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணப்பொருட்கள் ரூ.50 லட்சத்தில் விநியோகம் செய்யப்படும்.

The post அரசு கவின் கலை கல்லூரியில் புதிய வடிவமைப்புகளுக்கான போட்டி: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Govt Gavin College of Arts ,Minister ,T.Mo.Anparasan ,Tamil Nadu Handloom Industries Development Corporation ,Govt. Govt Art College ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...