×

உம்மன்சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கேரள அரசுக்கு சகோதரர் மீண்டும் கடிதம்

திருவனந்தபுரம்: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உம்மன்சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது சகோதரர் அலெக்ஸ் சாண்டி கேரள அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்தநிலையில் அவருக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுத்து வருவதாகவும், எனவே இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் உம்மன்சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் சாண்டி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து உம்மன்சாண்டிக்கு சிகிச்சை அளிக்க கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து அவர் பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உம்மன்சாண்டியின் சகோதரர் அலெக்ஸ் சாண்டி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பது: உம்மன்சாண்டிக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் உரிய தொடர் சிகிச்சை கொடுக்க மறுத்து வருகின்றனர். எனவே கேரள அரசு உடனடியாக ஒரு டாக்டர்கள் குழுவை அமைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பெங்களூரு தனியார் மருத்துவமனை டாக்டர்களிடம் தொடர்பு கொண்டு சிகிச்சை குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post உம்மன்சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கேரள அரசுக்கு சகோதரர் மீண்டும் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Ummansandi ,Kerala government ,Thiruvananthapuram ,Bengaluru ,Themanzandi ,government of Kerala ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...