×

சென்னை விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்திய பல்லவ மன்னர் மாமல்லனின் பெயரை சூட்டவும் : ராமதாஸ்

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு பல்லவ மன்னர் மாமல்லன் பெயர் சூட்டுவதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா பெயரையும் தாங்கிய பெயர்ப் பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

விமான நிலையங்களின் முனையங்களுக்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்கள் பத்தாண்டுகளுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அப்பெயர்களை சூட்ட வேண்டும்; அகற்றப்பட்ட பெயர்ப் பலகைகளை மீண்டும் வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பாமகவின் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.

விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்” என ராமதாஸ் கூறியுள்ளார்.

The post சென்னை விமான நிலையத்திற்கு தமிழர்களின் வீரத்தை உலகிற்கு உணர்த்திய பல்லவ மன்னர் மாமல்லனின் பெயரை சூட்டவும் : ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Pallava king Mamallan ,Ramadas ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!