×

10 நிமிடத்தில் 1000 பேர் பலியான ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் :உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது,போலீஸார் கண்மூடித்தனமாக கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த ஜாலியன் வாலாபாக்கில் உள்ள தியாகிகள் நினைவிடம் கடந்த 2021ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 123-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘ஜாலியன் வாலாபாக் நினைவு நாளில் உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை நினைவுக் கூறுகிறேன். அவர்களின் மாபெரும் தியாகம், நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றவும், வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்கவும் இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

The post 10 நிமிடத்தில் 1000 பேர் பலியான ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் :உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Jallianwala Bagh massacre day ,PM Modi ,New Delhi ,Modi ,Jallianwala Bagh massacre ,Angihar ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?