×

டீசலுக்கு பதிலாக மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக காஸ் மூலம் பேருந்துகள் இயக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஜெயவிலாஸ் குழுமத்தினர், தமிழகத்திலேயே முதன் முறையாக காஸ் மூலம் பயணிகள் பேருந்தை இயக்கி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் ஜெயவிலாஸ் குழுமம் சார்பில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை, கமுதி, தூத்துக்குடி, கோவில்பட்டி, எட்டையாபுரம் என பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஜெயவிலாஸ் குழுமத்தை சேர்ந்த டி.ஆர்.எஸ் கார்த்திகேயன் முதன் முறையாக தமிழகத்திலேயே காஸ் மூலம் இயக்கும் பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பேருந்து மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக எட்டையாபுரம், விளாத்திகுளம் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 10 காஸ் சிலிண்டர்கள் உள்ளன.

சிலிண்டருக்கு 13 கிலோ வீதம் 10 சிலிண்டர்களில் 130 கிலோ வரை காஸ் நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூல் 650 கி.மீ தூரம் வரை பேருந்தை இயக்கலாம். பராமரிப்பு செலவு குறைவு. இது குறித்து ஜெயவிலாஸ் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டையாபுரம், விளாத்திகுளம் வரை டீசல் மூலம் இயங்கி கொண்டிருந்த பேருந்தை, முதன் முறையாக காஸ் மூலம் இயங்கும் பேருந்தாக மாற்றியுள்ளோம். இதற்காக பிஎஸ்2 இன்ஜின், பிஎஸ்3 இன்ஜின்களில் தேவைப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்த பேருந்தை காஸ் மூலம் இயக்கி வருகிறோம்’’ என்றனர். இந்த பேருந்தை ஓட்டும் டிரைவர்கள் கூறுகையில், ‘‘காஸ் பேருந்தாக மாற்றிய பிறகு பெட்ரோல் கார் ஓட்டுவது போன்று உணர்வு உள்ளது. அதிர்வு கம்மியாக உள்ளது. புகை வரவில்லை. 550 கிலோ மீட்டர் வரை ஓட்டலாம். ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளனர்.

The post டீசலுக்கு பதிலாக மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக காஸ் மூலம் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Maduru ,Arapukkota ,ARUPUKOTA ,Arapukkotta Jayavilas Group ,Tamil Nadu ,Jayavilas ,Arapukkotte ,Arapukota ,Cass ,
× RELATED மகளிர் உரிமை தொகை பிரேமலதா பாராட்டு