×

தொடர் விடுமுறையை முன்னிட்டு வேப்பூரில் சிறப்பு ஆட்டுச் சந்தை: ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

கடலூர்: தொடர் விடுமுறையை முன்னிட்டு வேப்பூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை இன்று அதிகாலையில் நடைபெற்றது. இந்த ஆட்டுச் சந்தையில் வேப்பூர், சேப்பாக்கம், பெரிய நெசலூர், அரியநாச்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த வெள்ளாடு, கொடியாடு மற்றும் செம்பரி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஆடுகளை வாங்குவதற்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர். ஒரு ஆட்டின் விலை 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஒட்டுமொத்தமாக 1 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையான நிலையில் குறைந்த அளவில் மட்டுமே ஆடுகள் வந்ததால் ஏமாற்றம் அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறையை முன்னிட்டு வேப்பூரில் சிறப்பு ஆட்டுச் சந்தை: ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Vepur ,Cuddalore ,Cuddalore District ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை