×

கைத்தறி, துணி நூல் துறை அறிவிப்பால் ஜவுளித்தொழில் மேம்பாடு அடையும்: பியோ தலைவர் வரவேற்பு

திருப்பூர், ஏப்.13: கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை அறிவிப்பு குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கைத்தறி துறை சார்பில் 17 புதிய அறிவிப்புகள், துணி நூல் துறை சார்பில் 5 புதிய அறிவிப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார். அதில் சென்னையில் அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஜவுளி நகரம் ஒன்று பொது தனியார் கூட்டமைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும்.

சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு ரூ.60 லட்சத்தில் சென்னையில் நடத்தப்படும். கோவையில் தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு மேற்கொள்ளவும், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் தொழில் முனைவோர் பயிலரங்கம் ரூ.27 லட்சத்தில் நடத்தப்படும். துணிநூல் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இதன் மூலமாக ஜவுளித்தொழில் மேம்பாடு அடையும். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் காந்தி ஆகியோருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

The post கைத்தறி, துணி நூல் துறை அறிவிப்பால் ஜவுளித்தொழில் மேம்பாடு அடையும்: பியோ தலைவர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Pyo ,Tirupur ,Federation of Indian Exporters ,PEO ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...