×

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பொது சுகாதார அலுவலர்கள் தர்ணா

மதுரை, ஏப். 13: ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதார அலுவலர் சங்கத்தினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட பொது சுகாதார அலுவலர் சங்கம் சார்பில் மண்டல அளவிலான தர்ணா போராட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவண வெங்கடேஷ் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி.முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் காதர்உசேன் துவக்கவுரையாற்றினார்.

கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் சின்னபொண்ணு, வணிகவரித்துறை சங்க கல்யாணசுந்தரம், சுகாதார அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

The post காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பொது சுகாதார அலுவலர்கள் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Madurai ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா