×

முறையாக செடியை நடவு செய்தால் 1 ஏக்கருக்கு 20 டன் சாமந்தி பூ கிடைக்கும்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை

தோகைமலை, ஏப். 13: சாமந்தி பூ சாகுபடி செய்து தினந்தோறும் லாபம் பெறலாம், முறையாக செடிகளை நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 டன் எடையிலான பூக்கள் கிடைக்கும் என தோகைமலை பகுதி முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் சாமந்தி பூசாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் சாமந்தி பூசாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். விவசாயிகளுக்கு அன்றாடம் தங்களது கைகளில் பணம் கிடைக்க ஒரே வழி மலர் சாகுபடி என்பதால் தற்போது பல்வேறு மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சாமாந்தி பூசாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு முன்னோடி விவசாயிகள் சில ஆலோசனைகளை தெரிவித்து உள்ளனர்.

விவசாயிகள் ஒவ்வொரு சாகுபடியிலும் எந்த பயிராக இருந்தாலும் அவற்றை விதைத்து, பராமரித்து அவற்றை அறுவடை செய்து முடித்தாலும் நல்ல விலையை தேடி செல்வதே மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஒரே வழி உடனே தங்களது கைகளில் பணம் கிடைக்கும் மலர் பயிர்களை சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் அறுவடை செய்யும் மலர்கள் சந்தைகளுக்கு கொண்டு சென்றவுடன் ரொக்கப்பணம் விவசாயிகளின் கைக்கு வந்துவிடுகிறது. தற்போது மலர் சாகுபடியை பொறுத்தவரை சந்தைகளில் அதிக வரவேற்பும் இருந்து வருகிறது. இதனால் சாகுபடியில் மலர் பயிரிடுவது மிகவும் சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து வருகின்றனர். இதில் விவசாயிகள் மத்தியில் சாமந்தி பூசாகுபடியும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சாமந்தி பூரகங்கள் மற்றும் சாகுபடிக்கு ஏற்ற மண், சாமந்தி பூசாகுபடி முறைக்கு பல ரகங்கள் உள்ளது.

இதில் கோ 1, எம்.டி.யூ 1, எம்.டி.யூ 2 ஆகிய ரகங்கள் மஞ்சல் நிற பூக்களை கொடுக்கிறது. கோ 2 என்ற ரகம் கரும்பழுப்பு நிறத்தில் பூக்களை கொடுக்கிறது. சந்தைகளுக்கு ஏற்றவாறு இந்த ரகங்களை விவசயிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இதேபோல் சாமந்தி பூசாகுபடிக்கு ஏற்ற மண் என்பது வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலமானது ஏற்றதாக இருக்காது. இதனால் நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த கனமான களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பூபயிருக்கு ஏற்றவை ஆகும். மண்ணின் கார அமில தன்மை மற்றும் சாகுபடிக்கு ஏற்ற தட்பவெப்ப நிலைகள், சாமந்தி பூசாகுபடிக்கு மண்ணின் கார அமிலத்தன்மை என்பது சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும்.

இதேபோல் சாமந்தி பூபயிர்கள் ஒரு வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். இதனால் சாமந்தி பூசெடிகள் நீண்ட இரவுகள் மற்றும் குறுகிய பகல்கள் கொண்ட பருவ காலங்களில் பூக்கள் பூக்கும். இலைப்புள்ளி நோய் தென்பட்டால் மேன்கோசெப் 2 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து செடிகளில் தெளித்தால் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம். சாமந்தி பூக்கள் சாகுபடியில் நடவு செய்த 3 மாதங்களில் அறுவடைக்கு வருகிறது. பூக்களை சூரிய வெப்பத்திற்கு முன்னர் காலை நேரங்களில் பறிக்க வேண்டும். மேற்படி முறைகளில் சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 20 டன் சாமந்தி பூமலர்கள் கிடைக்கும் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

The post முறையாக செடியை நடவு செய்தால் 1 ஏக்கருக்கு 20 டன் சாமந்தி பூ கிடைக்கும்: முன்னோடி விவசாயிகள் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Pioneer ,Thokaimalai ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...