×

சாலையை விரைந்து அமைக்க கோரி மறியல்

ஆத்தூர், ஏப்.13: ஆத்தூர் அருகே, சாலையை விரைந்து அமைக்கக் கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் ஒன்றியம், தாண்டவராயபுரம் கிராமத்தில், மாதா கோயில் தெருவில் புதிய சாலை அமைப்பதற்காக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, சாலை தோண்டப்பட்டது. ஆனால், பள்ளம் தோண்டியதுடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பள்ளம் தோண்டியதால், குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், ஒரு மாதமாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்காத நிலையில். நேற்று 100க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில், அங்கு வந்த ஆத்தூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

The post சாலையை விரைந்து அமைக்க கோரி மறியல் appeared first on Dinakaran.

Tags : Athur ,Athur Union ,Thandavarayapuram ,Dinakaran ,
× RELATED செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல்