×

ஆளுநருக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம், சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்,

திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், ‘‘பாஜ ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர்கள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக கவர்னரும் தனது அதிகார எல்லையை புரிந்து கொள்ளாமல் நடக்கிறார். தமிழ்நாடு இனி இந்தியாவுக்கே வழிகாட்ட போகிறது. அதற்கான வேலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி விட்டார். இந்தப் போராட்டம் மிகப்பெரிய அணியாக திரளும். அந்த அணி டெல்லி நோக்கி விரைவில் வரும் அந்தப் போராட்டம் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி காட்டும்’’ என்றார்.

The post ஆளுநருக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Chennai ,Chennai South District ,Tamil Nadu ,Governor ,RN Ravi ,Saidapet Theradi ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி