×

மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஏப்.13: கிருஷ்ணகிரி அடுத்த மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் நேரில் பார்வயைிட்டு நேற்று ஆய்வு செய்தார். தேன்கனிக்கோட்டை வனச்சரகம், மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில், மலைவேம்பு, சில்வர் ஓக், தேக்கு, ஜெம்பு நாவல், வேம்பு புளியன், நெல்லி, மூங்கில், புங்கன், அத்தி, நீர்மத்தி, பூவரசன், ஆவாரம் பூ உள்ளிட்ட 23 வகையான மரக்கன்றுகள், 2023-24ம் நிதியாண்டில் தனியார் பட்டா மற்றும் காப்புக்காடு நிலங்கள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் நடவு செய்வதற்கு உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, மத்திய நாற்றாங்கால் பண்ணையை, கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அய்யூர் பசுமை சுற்றுலா மாளிகை வளாகத்தில், உனிமுள் (லண்டானா) செடியின் மூலம் பிரம்புகள் தயார் செய்து, அதில் தயாரிக்கப்பட்ட சேர், டீபாய், டேபிள், கட்டில், ஊஞ்சல், அலமாரி போன்ற பொருட்கள் உற்பத்தி செய்வதை பார்வையிட்டு, மலைவாழ் இளைஞர்களுக்கு கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்கவும், ஓசூர் போன்ற பகுதிகளில் அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் வனத்துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, உதவி வனப்பாதுகாவலர் ராஜமாரியப்பன், வன சரகர்கள் முருகேசன், சீதாராமன், வெங்கடாசலம், சுகுமார், பார்த்தசாரதி, தாசில்தார் சரவணமூர்த்தி, துணை தாசில்தார் மதன்குமார் மற்றம் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள் உடனிருந்தனர்.

The post மேலூர் மத்திய நாற்றங்கால் பண்ணையில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Melur Central Nursery Farm ,Krishnagiri ,Dhenkanikottai ,Dinakaran ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...