×

பற்களை பிடுங்கிய விவகாரம்அம்ைப காவல் உட்கோட்டத்தில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

விகேபுரம், ஏப். 13: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் அம்ைப, கல்லிடை, விகேபுரத்துக்கு புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்து நெல்லை சரக டிஐஜிக்கு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விகேபுரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பற்களைப் பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, தனிப்பிரிவு ஏட்டு ராஜ்குமார், விகேபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், தனிப்பிரிவு காவலர் போகன், அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தனிப்பிரிவு ஏட்டு சந்தனக்குமார், ஏட்டு மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சேரன்மகாதேவி சப்.கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் பாதிக்கப்பட்டவர்களிடம் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் ெசய்தார். இந்த அறிக்கையின் பேரில் பல் பிடுங்கிய விவகாரத்தில் முகாந்திரம் இருப்பதாக தகவல் வெளியானது. இதைதொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவரிடம் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் கடந்த 2 நாட்கள் அமுதா விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அம்பை காவல் உட்கோட்டத்தில் காலியாகவுள்ள அம்பை, விகேபுரம், கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக இனஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டராகவும், கோவில்பட்டி இன்ஸ்பெக்டர் சுஜி ஆனந்த் விகேபுரம் இன்ஸ்பெக்டராகவும், கன்னியாகுமாரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து 3 போலீஸ் நிலையத்திலும் காலியாகவுள்ள தனிப்பிரிவு காவலர்கள், ஏட்டுக்கள் ஆகியோரும் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பற்களை பிடுங்கிய விவகாரம்
அம்ைப காவல் உட்கோட்டத்தில் புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Ambasamudram ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி