×

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்ட பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட தடை இல்லை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், மாங்காடு மூவீஸ் பட நிறுவனத்தின் சார்பில் ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எங்கள் நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தின் கதைக்களம் மூளை மாற்று அறுவை சிகிச்சை தொடர்பானது. தற்போது எங்களது ஆய்வுக்கூடம் படத்தின் கதையை எங்களது அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்-2 என்ற படத்தை தயாரித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியானது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதால், இப்படத்தை எந்த இணையதளங்களிலும் வெளியிடக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விஜய் ஆண்டனி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், ‘இந்த படம் மே மாதம் தான் வெளியாக உள்ளது. எனவே, தடை எதுவும் விதிக்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, படத்துக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்ட பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட தடை இல்லை appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Chennai ,Rajaganapathy ,Mangadu Movies ,Chennai High Court ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch