×

ரயில்வே பணி நியமன மோசடி வழக்கு: லாலு மகள் ராகிணியிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு

புதுடெல்லி: ரயில்வே பணி நியமனத்துக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாவின் மகள் ராகிணி யாதவிடம் அமலாக்கத்துறையினர் நேற்று வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2004-2009ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்து வந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பீகாரை சேர்ந்த பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டில் லாலுவின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பாரதி,, ராகிணி யாதவ், மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லாலுபிரசாத் யாதவின் மகள் ராகிணி யாதவிடமும் அமலாக்கத்துறை நேற்று விசாரணை மேற்கொண்டது. இதற்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு நேரில் சென்ற ராகிணி யாதவிடம் அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த வழக்கில் ராகிணி யாதவின் சகோதரரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவிடம் திங்கட்கிழமை(ஏப்.10) அமலாக்கத்துறை வாக்குமூலத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post ரயில்வே பணி நியமன மோசடி வழக்கு: லாலு மகள் ராகிணியிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Lalu ,Ragini ,New Delhi ,Lalu Prasad ,Ragini Yadav ,
× RELATED வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள்...