×

டோக்லாம் எல்லையில் சீன கட்டுமானம்; நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: டோக்லாம் எல்லைப் பகுதியில் சீனாவின் கட்டுமானங்கள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது. இந்தியா-சீனா-பூடான் நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் முக்கிய பகுதியாக டோக்லாம் பீடபூமி அமைந்துள்ளது. இந்நிலையில் டோக்லாம் பகுதியில் படைகளை குவித்து வரும் சீனா, அங்கு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக பல்வேறு கட்டிடங்களையும் கட்டி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வௌியாகின.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வௌியிட்ட அறிக்கையில், “டோக்லாம் பகுதியில் சீனா கட்டுமான பணிகளை செய்து வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்த முந்தைய நிலையை மீட்டெடுப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது. இந்த விவகாரத்தில் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும். உள்துறை அமைச்சர் அமித் ஷா மோடியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு தவறான தகவல்களை சொல்வதற்கு பதிலாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பழைய நிலையை கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

The post டோக்லாம் எல்லையில் சீன கட்டுமானம்; நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Doklam border ,Congress ,New Delhi ,China ,India ,Bhutan ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...