×

விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்புகள்: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார். அப்போது மின்சாரத்துறை சார்ந்த வெளியிட்ட அறிவிப்புகள்:

  • 2023-24ம் ஆண்டில் 50,000 புதிய விவசாய இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.
  • அரசு-தனியார் பங்களிப்புடன் 5000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
  • சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், மற்ற மாவட்டங்களை விட சூரிய ஒளியின் ஆற்றல் அதிகமாக உள்ளதால், அந்த மாவட்டங்களில் அதிக அளவில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு ஏதுவாக, புதிய 400 கி.வோ, 230 கி.வோ மற்றும் 110 கி.வோ துணை மின்நிலையங்கள் இந்த மாவட்டங்களில் அமைக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, கூடுதலாக தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களான கோவை, மதுரை மற்றும் கரூர் மாநகராட்சி செல்லும் மின்கம்பிகளையும் புதைவடங்களாக அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
  • வடசென்னையில் செயல்பட்டு வரும் மூன்று 210 மெகாவாட் திறன் கொண்ட வட சென்னை அனல் மின் நிலையம் 1-ன் செயல் திறனை மேம்படுத்தி, மின் உற்பத்தியை பெருக்குவதற்காக ரூ.58.18 கோடி மதிப்பீட்டில் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • இரண்டு 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையம் 2- ன் செயல் திறனை மேம்படுத்துவதற்கு ரூ.95.90. கோடி மதிப்பீட்டில் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்தின் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஒரு மணி நேரத்தில் 2000 டன்கள் வரை நிலக்கரியினை கையாளுவதற்கு இரண்டு இயந்திரங்கள் சென்னை காமராஜர் துறைமுகத்தில் நிறுவப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள 70 ஆண்டு காலம் பழமை வாய்ந்த முன்று 12 மெகாவாட் திறன் கொண்ட மோயார் புனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று எண்ணிக்கையிலான உயர் அழுத்த நீர் எடுத்து செல்லும் குழாய்கள் ரூபாய் 84.67 கோடி மதிப்பீட்டில் மாற்றப்படும்.
  • பில்லூர், நிராலப்பள்ளம் திருப்பு அணை, பாபநாசம் திருப்பு அணை மற்றும் அவலாஞ்சி ஆகிய நான்கு அணைகளில் ரூ. 78.25 கோடி மதிப்பீட்டில் உலக வங்கியின் நிதியுதவியுடன் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • தமிழ்நாடு மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கென தனியாக தகவல் தொழில் நுட்பப் பிரிவு எவ்வித கூடுதல் செலவினமின்றி நடப்பாண்டில் உருவாக்கப்படும்.
  • திருநெல்வேலி, ஸ்ரீரங்கம், கோயம்புத்தூர், அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர், மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
  • ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 100 கி.வாட் திறன் கொண்ட சூரிய சக்தியினால் இயங்கும் இரண்டு வாகன சார்ஜிங்க் நிலையங்கள் அமைக்கப்படும்.

The post விவசாயிகளுக்கு 50,000 இலவச மின் இணைப்புகள்: பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,Power Supplies, Prohibition and Reform Department ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...