×

சிட்டி யூனியன் வங்கியில் மொபைல் பேங்கிங் ‘வாய்ஸ் பயோமெட்ரிக்’ வசதி: தலைமை நிர்வாக அதிகாரி காமகோடி அறிமுகம் செய்து வைத்தார்

சென்னை: சிட்டி யூனியன் வங்கி மொபைல் பேங்கிங் செயலியில் உள்நுழைவதற்கான வாய்ஸ் பயோமெட்ரிக் வசதியை தலைமை நிர்வாக அதிகாரி காமகோடி அறிமுகம் செய்துவைத்தார். சென்னை தி.நகரில் சிட்டி யூனியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பேங்கிங் செயலியில் உள்நுழைவதற்கு வாய்ஸ் பயோமெட்ரிக் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் படி வங்கியின் வாடிக்கையாளர்கள் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்படுவார்கள்.

மேலும் ரகசிய எண்ணை, OTP போன்றவற்றை போல் வாய்ஸ் பயோமெட்ரிக் ரெக்கார்ட் செய்யப்பட்ட குரல் அல்லது மிமிக் செய்யப்பட்ட குரல் நிராகரிக்கப்பட்டு மோசடி தடுக்கப்படும். மேலும் பீட்டாவின் கீழ் உள்ள நெட் பேங்கிங் பயனார்களுக்கு விரைவில் வாய்ஸ் பயோமெட்ரிக் உள்நுழைவு அமலாக்கப்படும். அதேபோன்று ஐடி, ரகசிய எண், OTP, முக ஐடி, கைரேகை உள்ளிட்டவற்றின் ஏதேனும் ஒன்றினை வாடிக்கையார்களின் விருப்பத்திற்கேப தேர்வு செய்யலாம். அதன்படி வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வாய்ஸ் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி காமகோடி கூறுகையில்: தொலைத்தொடர்பு துறை மற்றும் துறையின் ஆதரவுடன் வங்கி தொழில்நுட்பத்தில் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான இன்ஸ்டிடியூட் வழிகாட்டுதலின் கீழ், சென்னையின் ஸ்டாட் அப் நிறுவனமான கைசன் செக்யூர் வாய்ஸ் நிறுவனத்தின் மூலம் வாய்ஸ் பயோமெட்ரிக் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ஸ் பயோமெட்ரிக் வாடிக்கையாளர் சேவை மற்றும் பாதுகாப்பான வங்கியை உறுதி செய்யும் வகையில் அளவிற்கு புதிய மைல்கல்லாக அமையும். வாடிக்கையாளர்கள் தங்கள் குரலை ஒரு முறை பதிவு செய்தாலே பல்வேறு வகையில் சரிபார்க்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் குரல் மூலம் உள்நுழையலாம். தற்போது உங்கள் குரல் உங்கள் கடவுச்சொல் ஆகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்ற வேலைகளை செய்துகொண்டே மொபைல் பிங்கிங் எளிதாக உள் நுழைய முடியும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மூத்த தொழில்நுட்ப நிபுணர்கள் பிரசாந்த், ரெங்காராஜன், தொலைத் தொடர்ப்பு துறை இயக்குனர் விஜய் கிருஷ்ணமூர்த்தி, தொலைத் தொடர்பு துறை துணை இயக்குனர் சுதாகர், தலைவர் நாராயணன் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post சிட்டி யூனியன் வங்கியில் மொபைல் பேங்கிங் ‘வாய்ஸ் பயோமெட்ரிக்’ வசதி: தலைமை நிர்வாக அதிகாரி காமகோடி அறிமுகம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : City Union Bank ,CEO ,Kamakody ,Chennai ,Kamakodi ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்