×

கேப்டன் தோனி 200!

சென்னை: ஐபிஎல் தொடரில் ஒரே அணியின் கேப்டனாக 200 போட்டிகளில் தலைமை வகித்த முதல் வீரர் என்ற பெருமை எம்.எஸ்.தோனிக்கு கிடைத்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த லீக் ஆட்டம், சென்னை அணியின் கேப்டனாக தோனி களமிறங்கிய 200வது போட்டியாக அமைந்தது. இதையொட்டி தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் என்.சீனிவாசன் சிறப்பு நினவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியுடன் இணைந்துள்ள தோனி, 4 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

சிஎஸ்கே அணி 2016-17ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது மட்டுமே அவர் வேறு அணிக்காக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தோனி தலைமையில் சென்னை அணி விளையாடிய 199 போட்டிகளில் (நேற்றைய போட்டி தவிர்த்து) 120ல் வென்று சாதனை படைத்துள்ளது (78 தோல்வி, 1 போட்டியில் முடிவு இல்லை). ரைசிங் புனே ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய 14 போட்டிகளையும் சேர்த்தால், தோனி இதுவரை 214 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா (146 போட்டி) 2வது இடத்திலும், ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராத் கோஹ்லி (140 போட்டி) 3வது இடத்திலும் உள்ளனர்.

The post கேப்டன் தோனி 200! appeared first on Dinakaran.

Tags : dony ,Chennai ,PTI ,IPL ,S.S. ,Doni ,Dhoni ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...