×

தொன்மையான 387 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: 387 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும் என திகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றும் (11.04.2023) இன்றும் (12.04.2023) மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) திரு.பொ.ஜெயராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், குப்பாம்பட்டி, அருள்மிகு இருளப்பசாமி திருக்கோயில், கரூர் மாவட்டம், ஆதிரெட்டிபாளையம், அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், திருப்பூர் மாவட்டம், பூலாங்கிணறு, அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம், கருநிலம், அருள்மிகு லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், சின்னகாவனம், அருள்மிகு நெல்லூரம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 188 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கும்,

இன்று (12.04.2023) திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், விடையல்கருப்பூர், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், ரெங்கநாதபுரம், அருள்மிகு ஜம்புநாதசுவாமி திருக்கோயில், திருத்துறைப்பூண்டி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், கிளாக்காடு, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டம், கோயில்கண்ணாப்பூர், அருள்மிகு நடுதறிநாதர் திருக்கோயில், பாலக்குறிச்சி, அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில், தலைஞாயிறு, அருள்மிகு காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், வேதாரண்யம், அருள்மிகு கலிதீர்த்த அய்யனார் திருக்கோயில், கீழ்வேளூர், அருள்மிகு மழைமுத்துமாரியம்மன் திருக்கோயில், கீழ்வேளூர், அருள்மிகு கல்யாணநாதசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 199 திருக்கோயில்கள் என ஆக மொத்தம் 387 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.

இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள் திரு.சந்திரசேகர பட்டர், அனந்தசயனபட்டாச்சாரியார், கோவிந்தராஜப்பட்டர், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி முனைவர் கே.தட்சிணாமூர்த்தி, கட்டமைப்பு வல்லுநர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுநர்கள் சீ.வசந்தி, இராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் முனைவர் டி.சத்தியமூர்த்தி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தொன்மையான 387 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : State Expert Committee ,Chennai ,Thirukoils ,Expert Group of Recommendations ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...